Tamil community - Pastime Group

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.




You are not connected. Please login or register

 
 

கடி ஜோக்ஸ் -சில

Message (Page 1 of 1)

#1

คdмίnίѕтraтor

avatar
 
Administrator
Administrator

Posted on Sat Oct 12, 2013 6:15 pm

 
“டாக்டர் இவ்வளவு மருந்தையும் ரெண்டே நாள்ல சாப்பிட்டு முடிக்கணும்னு சொல்றீங்களே, ஏன்?”

“ரெண்டு நாளைக்கு அப்புறம் எக்ஸ்ப்ரி டேட் முடிஞ்சுடும்.”

தலைவரால சட்டசபையே அதிர்ந்திடுச்சாம்…”

“அடேங்கப்பா … அப்படி என்ன பேசினாரு?” “பேசலைய்யா… குறட்டை விட்டாரு!”

==========================================

“பாட வந்தவங்க, எதுக்கு கையில கிளவுஸ் எடுத்து மாட்டிக்கறாங்க…?”

“குத்துப்பாட்டு பாடப் போறாங்களாம்!”


“அவர் சீலிங் ஃபேன் ரிப்பேர் பண்றவர்னு எப்படிச் சொல்றே..?”

“எப்போ கேட்டாலும், “தலைக்கு மேல வேலை இருக்கு”ன்னு சொல்றாரே!”

==========================================

“என்னப்பா காபியில ‘ஈ’ செத்துக்கிடக்குது…?”

“ஸ்பெஷல் காபியிலதான் சார் ‘ஈ’ உயிரோட இருக்கும்”

=================================================

புதுசா பதவி ஏத்த அமைச்சரோட அலுவலகத்துல ‘எல்’போர்டு மாட்டியிருக்காங்களே… ஏன்…?” அதுவா…

அவர் இப்பத்தான் ‘ஊழல்’ செய்ய ஆரம்பிச்சிருக்காராம்…”

===============================================================

எல்கேஜி பையன் : என்னை உங்களுக்கு பிடிச்சிருக்கா?

ஆசிரியை : ஆமாம்.

எல்கேஜி பையன் : அப்படியானால், என் அம்மா அப்பாவை வரச்சொல்லி உங்கள் வீட்டில் பேசச் சொல்லட்டுமா?

ஆசிரியை : டேய் முட்டாள்...உன மனசுல என்ன நினைச்சிகிட்டிருக்க?

எல்கேஜி பையன் : ஹேய்ய.... நான் டியூசனுக்கு வர்றதைப் பற்றி சொன்னேன்.

கிறுக்கு பயபுள்ள எப்ப பார்த்தாலும் நம்மளயே நினைச்சிகிட்டு இருக்கா!


=============================================================

என்ன மாப்ளே……பொண்ணு கூட தனியா பேசணும்னு
போயிட்டு, உடனே திரும்பி வந்துட்டீங்க..?
-
பொண்ணு அவ பாய் ஃபிரண்ட் கூட செல்லுல பேசிக்கிட்டிருக்கு..!

=========================================================


நம்ம தலைவர் பேசறது ஒண்ணு, செய்யறது ஒண்ணா..எப்படி?
-
பிரதமரை எதிர்ப்போம், குரல் கொடுப்போம்னு பேசுறாரு, அப்புறம்
‘வாயில்லாத ஜீவனை இம்சிக்க கூடாது’ன்னும் சொல்றாரு…!

============================================================


நம்ம டான்ஸ் போட்டிக்கு ஒரு நிஜ நீதிபதியை நடுவரா
போட்டது தப்பாப் போச்சு...!
-
ஏன்...என்னாச்சு?
-
போட்டி முடிஞ்சதும் முடிவைச் சொல்லாம, 'தீர்ப்பு தேதி
குறிப்பிடாம ஒத்தி வைக்கப்படுகிறது'ன்னு அறிவிச்சுட்டாரே..!

==============================================================

" இந்த விபத்து எப்ப நடந்தது ?

" ' செத்த ' நேரத்துக்கு முன்னாடிதான் !

===============================================================


" டாக்டர் , பேஷன்ட் வயித்துக்குள்ள செல்போன் அலறுது !

" அடடா , ஆபரேஷனப்ப செல்போனை சைலன்ட்ல போடாம
விட்டுட்டேனே ! "

===================================================================

" உங்க மனைவியைக் ' கைபேசி 'னு செல்லமா கூப்பிடுறீங்களே...
அவங்க செல்போன் பிரியரா ? "

" அட , நீங்க வேற ! அவளுக்குக் கோபம் வந்தா கைதான் பேசும் !

===================================================================

" உங்க மனைவியைக் ' கைபேசி 'னு செல்லமா கூப்பிடுறீங்களே...
அவங்க செல்போன் பிரியரா ? "

" அட , நீங்க வேற ! அவளுக்குக் கோபம் வந்தா கைதான் பேசும் !

===================================================================

டாக்டர்... தியேட்டர் ரெடி !

இன்னிக்கு ' டிக்கெட் ' வாங்கப்போறது யாரு ? "

-----------------------------------------

தினமும் சரியா 10 மணிக்கு எங்க தோட்டத்துக்கு ஒரு பாம்பு
வருது !

டைம் பாம்பா இருக்கும் !

====================================================================

டார்லிங், என்னை நம்பி கட்டின புடவையோடு வருவியா ?

என்ன இப்படிக் கேட்டுட்டீங்க, கட்டின புருஷனொடவே வரத்
தயார் !

===================================================================

என்னோடது லேட் மேரேஜ் . ஆனா, என் பையன்
கல்யாணத்தை சீக்கிரமா முடிச்சுட்டேன் !

" எப்போ முடிச்சீங்க ?

" காலைல 6 மணிக்கு !
====================================================================

நீங்க முன்னால ' மீசை ' வெச்சிருந்தீங்க இல்ல.... "

முன்னால வெச்சிருந்தாத்தான் அது ' மீசை ',
பின்னால வெச்சிருந்தா அது ' குடுமி '.

------------------------------------------

வேலைகாரியோட சினிமாவுக்குப் போயிருக்கீங்களே,
நல்லா இருக்கா ?

பரவா இல்ல, ஒரு வாட்டி பார்க்கலாம் !

===========================================================



[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]


http://tamil.boardonly.com


Message (Page 1 of 1)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum


  • Total Posts:
  • Total Members:
  • Newest Member:
  • Most Online: Most users ever online was 15 on Sat Jun 18, 2016 1:26 pm

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests
Users browsing this forum: None