Tamil community - Pastime Group

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.
You are not connected. Please login or register

 
 

வீட்டு உணவுகளே விஷமாகிறது - ஜாக்கிரதை !

Message (Page 1 of 1)

#1

คdмίnίѕтraтor

avatar
 
Administrator
Administrator

Posted on Thu Oct 24, 2013 10:12 pm

 
வித்தியாசமான உணவை, ருசியாக சாப்பிட எல்லோரும் விரும்பத்தான் செய்கிறார்கள். ஆனால் சில நேரங்களில் அந்த சுவை மிகுந்த உணவே விஷமாகி, உடலை கடுமையாக பாதித்துவிடுகிறது. பெரும்பாலும் வீட்டில் தயாரிக்கப்படும் உணவுகள் உடலுக்கு ஏற்புடையதாக இருக்கிறது.

எந்தெந்த உணவுகள் நமது உடலுக்கு ஏற்றதாக இருக்குமோ, அதில் நமக்கு பிடித்த மசாலாக்கள் சேர்த்து சமைப்பதால் வீட்டு உணவுகள் பெரும்பாலும் உடலுக்கு பிரச்சினை தராததாக இருக்கிறது. வீட்டில் தயாரிக்கப்படும் உணவுகள் சிறந்ததாக இருந்தாலும், அது முழு ஆரோக்கியமானதாக இருக்கவேண்டும் என்றால், அதிலும் கவனிக்கவேண்டிய விஷயங்கள் சில உண்டு.

* காய்கறிகளை நன்றாக கழுவவேண்டும். நன்றாக கழுவாவிட்டால் அதில் அழுக்கும், பயன்படுத்தப்பட்ட பூச்சி மருந்துகளின் தாக்கமும் இருக்கும். அதனால் பெயரளவுக்கு கழுவாமல் நன்றாக கழுவவேண்டும். காய்கறிகளை சிறிது நேரம் மஞ்சள் தூள், உப்பு கலந்த நீரில் போட்டுவைத்துவிட்டு பின்பு கழுவி, நறுக்குங்கள். அவ்வாறு செய்தால் பூச்சிக் கொல்லி மருந்துகளால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் அகன்றுவிடும்.

* வேலைக்கு போகும் அவசரத்திலோ, பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பும் அவசரத்திலோ காய்கறிகளை சுத்தம் செய்து சமைக்காதீர்கள். அதை சாப்பிடும்போது குறிப்பாக உங்கள் குழந்தைகளின் உடல் நலம் பாதிக்கப்படலாம்.

* சிலரது உடலுக்கு ஒருசில காய்கறிகள் ஒத்துக் கொள்வதில்லை. அவற்றை முழுமையாக தவிர்த்திட வேண்டும்.

* குழந்தைகளும், பெரியவர்களும் இப்போது புதிய உணவு வகைகளை தேடிச் சென்று சுவைக்கிறார்கள். அதை ஒரு பொழுது போக்காக விரும்பி செய்கிறார்கள். துரித உணவுகளில் கண்களைக் கவரும் நிறத்திற்காக வண்ணப் பொடிகள் சேர்க்கப்படுகின்றன. ருசிக்காகவும் சில பொருட்களை சேர்க்கிறார்கள். அவைகள் உடலுக்கு பெரும் கேடுகளை உருவாக்குகிறது.

* பெரும்பாலான சாலையோரக் கடைகள் தூய்மையாக இருப்பதில்லை. அவர்கள் தரமான உணவுப் பொருட்களை வாங்கி, சுகாதாரமாக உணவுகள் தயாரிப்பதும் இல்லை. பழைய உணவுகளையும் வழங்கிவிடுகிறார்கள். அது விஷத்தன்மை கொண்டதாகிவிடுகிறது.

* எண்ணெய்யில் பொரிக்கப்படும் உணவு வகைகள் வாய்க்கு ருசியாக இருந்தாலும் வயிற்றுக்கு தொந்தரவாகவும், ஆரோக்கியத்திற்கு கெடுதியாகவும் மாறிவிடுகிறது. ஏற்கனவே பொரித்த எண்ணெய்யில் மீண்டும் மீண்டும் சமைப்பதால் ஏற்படும் விளைவு மிக மோசமானது.

* சாலையோர கடைகளில் பஜ்ஜி, பக்கோடா, சமோசா போன்றவை அமோகமாக விற்பனை யாகிறது. பொரித்துக்கொண்டே இருக்கும் போது, எண்ணெய் பற்றாக்குறை ஏற்படும்போது ஒருசில கடைகளில், பாலிதீன் கவரில் இருக்கும் எண்ணெய்யை, வெட்டி அதன் உள்ளே ஊற்றுவதற்கு பதில், ஏற்கனவே கொதித்துக்கொண்டிருக்கும் எண்ணெய்யில் பாக்கெட்டின் ஓரத்தை அப்படியே காட்டிவிடுகிறார்கள்.

பாலிதீன் கவர் உருகி எண்ணெய் உள்ளே பாய்கிறது. பாலிதீன் எண்ணெய்யில் கலப்பதும், அதை மக்கள் வாங்கி சுவைப்பதும் திகிலான விஷயம். ஆபத்தான நோய்களை இது உருவாக்கும். இது மட்டுமல்ல, இதுபோன்ற ஆபத்தான அதிரடி வேலைகள் பலவற்றை சாலையோர கடைகளில் செய்கிறார்கள்.

* உயர்ரக ஓட்டல்களில் மக்கள் அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுகிறார்கள். வாடிக்கையாளர்களின் தேவைக்காக அங்கே கோழி, மீன் போன்றவைகளை பதப்படுத்திவைத்திருக்கிறார்கள். அவைகளை குறிப்பிட்ட நேரத்திற்குள் சமைத்திடவேண்டும்.

சமைத்ததை அதிகம் தாமதிக்காமல் வாடிக்கையாளர்கள் சாப்பிடவும் வேண்டும். ஒருசில ஓட்டல்களில் காலங் கடந்த உணவுகளில் வாசனைப் பொருட்களை கலந்து புதியதுபோல் வழங்கிவிடுகிறார்கள். அதுவும் உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது.

* கீரை வகைகளை சமைக்கும்போது குறிப்பிட்ட நேரம் வரை அதை வேகவிட வேண்டும். குறைந்த நேரமே வேகவைத்து அவசரமாக சாப்பிடுவது உடலுக்கு நல்லதல்ல.

* மூடாமல் வைத்திருக்கும் உணவுகளில் ஈக்களால் பல தொற்று கிருமிகள் உருவாகுகின்றன. அவை வயிற்றுப்போக்கு, வாந்தி, கடுமையான வயிற்றுவலி போன்றவற்றை ஏற்படுத்தும். பெரும்பாலான வயிற்றுக் கோளாறுகளுக்கு நாம் சாப்பிடும் உணவுதான் காரணம். உணவால் நம் உடலுக்கு 250 விதமான பாதிப்புகள் ஏற்படுவதாக டாக்டர்கள் கூறுகிறார்கள்.

நன்றி : மாலைமலர்

நன்றி : ஈகரை krishnaamma[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]


http://tamil.boardonly.com


Message (Page 1 of 1)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum


  • Total Posts:
  • Total Members:
  • Newest Member:
  • Most Online: Most users ever online was 15 on Sat Jun 18, 2016 1:26 pm

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests
Users browsing this forum: None